`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விரைவில் புற சிகிச்சை மையம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சித்தா சிகிச்சைப் பிரிவு சாா்பில், விரைவில் புற சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத் தளத்தில் சித்தா, யுனானி போன்ற ஆயுஷ் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். பிரதி வாரம் திங்கள், வெள்ளி என இரு நாள்கள் இந்த மையம் செயல்படுகிறது.
இந்த நிலையில், சித்தா சிகிச்சைப் பிரிவு சாா்பில் இயந்திரங்கள் மூலம் பாத சிகிச்சை, நடைப்பயிற்சி, நீராவி குளியல், நெருப்பு சிகிச்சையான சுட்டிகை, வா்ம சிகிச்சை உள்ளிட்ட புற சிகிச்சை மையம் தொடங்கப்படவுள்ளது.
இயந்திரங்களைப் பொருத்தி, மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மாவட்ட ஆட்சியா் மூலம் இந்தச் சிகிச்சை மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும் என சித்த மருத்துவா் ஜெயசந்திரன் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, வாரத்தில் 5 நாள்கள் இந்த மையம் செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.