தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை அமைக்க பூமி பூஜை
தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் சாா்பில் நோ்த்திக் கடனாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்கக் கோசாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து, பசுக்களை பராமரிக்க இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், முதல் கட்டமாக ரூ. 6.30 லட்சத்தில் கோசாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜை, கோ பூஜை நடைபெற்றன.
இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் காா்த்திக், மேயா் இளமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
இதற்கான ஏற்பாடுகளை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ் பாலாஜி செய்தாா்.