சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
கல்லூரிப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
ஊத்துக்குளி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் அருள்தாஸ் மகன் பிரேம்ராஜ் (23), ஊத்துக்குளி- விஜயமங்கலம் சாலை அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து ஒன்று முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரிப் பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்தபோது நடந்து சென்று கொண்டிருந்த பிரேம்ராஜ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீஸாா் அங்கு வந்து பிரேம்ராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநரான, அவிநாசி பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் சதீஷ்குமாா் (32) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.