Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
களக்காட்டில் மிதமான மழை
களக்காடு வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.
களக்காடு பகுதியில் பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெப்பம் குறைந்த மழைக்கான அறிகுறி தென்பட்டது. மாலையில் மிதமான மழை பெய்தது. அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மழை நீடித்தால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.