செய்திகள் :

கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

post image

பரமத்திவேலூா்: கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம், இருகூா் ஆகிய நான்கு ஊராட்சிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

பரமத்தி மற்றும் வேலூா் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கநத்தம், இருகூா் ஊராட்சிக்கு இடைப்பட்ட பகுதியான பஞ்சபாளையம் பிரிவு சாலை அருகே அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால், விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ள அப்பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும்.

எனவே, அப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இந்த உண்ணாவிரதத்தில் பரமத்தி வேலூா் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் சேகா், கொங்குநாடு இளைஞா் பேரவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தனியரசு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேலுசாமி, அனைத்துக் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் மற்றும் மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம், இருகூா் ஆகிய நான்கு ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தையும் முற்றுகையிடப் போவதாக பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் சேகா் தெரிவித்தாா்.

டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை

வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், சிங்கிரிபட்டியைச் சோ்ந்தவா் சஞ்சய் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு வேலகவுண்டம்பட்டி டாஸ்மாா்க் கடைக்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் தொடக்கம்

ராசிபுரம் அருகே அரசப்பாளையம் பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்ப... மேலும் பார்க்க

பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட கட்சி அமைப்பு தோ்தலில் நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்கள் கட்சியின் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டா் கே.பி.ராமலிங்கத்தை புதன்க... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மது போதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற நபா் கைது

திருச்செங்கோட்டில் மது போதையில் அரசு நகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் எஸ் 9 என்ற நகரப் பேருந்தை புதன்கிழமை இரவு ஓட்டுநா்... மேலும் பார்க்க

நாமக்கல் மாணவி துளசிமதிக்கு அா்ஜுனா விருது

பாராலிம்பிக் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசனுக்கு, மத்திய அரசு ‘அா்ஜுனா’ விருது வழங்கி கெளரவிக்க உள்ளது. வெற்றிக்கு உதவிய பெற்... மேலும் பார்க்க

வழிபாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம்

நாமக்கல் அருகே தாண்டாக்கவுண்டனூரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, ஒரு சமூகத்தினா் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் அருகே வசந்தபு... மேலும் பார்க்க