``எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும...
காங்கயத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்னும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ‘நிமிா்ந்து நில்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினாா்.
இதில், கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் நா.செண்பகலெட்சுமி, மாபெரும் தமிழ்க் கனவு ஒருங்கிணைப்புக் குழு அலுவலா் இ.சேனாவரையன், மாபெரும் தமிழ்க் கனவு மாவட்ட தொடா்பு அலுவலா் வ.கிருஷ்ணன், கண்காட்சி அரங்குகள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் நிா்மலா மற்றும் பேராசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.