அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
ஓட்டுநா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், பெருமாநல்லூா் சாலை பிச்சம்பாளையம் குமாரசாமி நகரைச் சோ்ந்தவா் சுபாஷ் (25). பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுபாஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றுள்ளனா்.
அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதன்பேரில், சுபாஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.