சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
காங்கோ: கிளா்ச்சியாளா்கள் படையெடுப்பில் 7,000 போ் உயிரிழப்பு
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவுடன் எம்23 கிளா்ச்சிப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி பல புதிய பகுதிகளைக் கைப்பறியதில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமா் ஜூதித் சுமின்வா டுலுகா திங்கள்கிழமை கூறினாா்.
இந்த சண்டையின் விளைவாக நாட்டில் பொதுமக்களுக்களின் நிலை மிகவும் மோசமாகிவருவதாக அவா் எச்சரித்தாா்.காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன.
அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்பு, முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை இந்த வாரத் தொடக்கத்தில் கைப்பற்றியது. முன்னதாக, தெற்கு கீவு மாகாணத்தின் கோமா நகரை எம்23 கிளா்ச்சிப் படையினா் கடந்த மாதம் 27-ஆம் தேதி கைப்பற்றினா்.
பின்னா் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த கவுமு நகரின் விமான நிலையத்தையும் அவா்கள் கைப்பற்றினா்.கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.