செய்திகள் :

காஞ்சனா - 4 படத்தில் பேயாக நடிக்கும் பூஜா ஹெக்டே?

post image

காஞ்சனா - 4 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது.

பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.

இதையும் படிக்க: விடாமுயற்சி டிரைலர் எப்போது?

சமீபத்தில், ராகவேந்திரா புரடக்‌ஷன் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாகவும் இதில் பேய் கதாபாத்திரத்தில் பூஜா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 3 - 9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)குடும்பத்தில் இணக... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தி, கருடன், நந்தன் என சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்குப் பிறகு... மதகஜராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். விஜய் ஆன்டணி இசையமைத்துள்ள இந்தப் ப... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03.01.2025மேஷம்:உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி... மேலும் பார்க்க

இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட்: ரோஹித் சர்மா நீக்கம்!

தகுந்த ஃபாா்ம் இல்லாமல் தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை தக்க வைக்கும் முனைப்பில் இந்தியா!

சிட்னி: பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஆட்டம், சிட்னியில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது ஆஸ்திரேலியா 2-1 என ம... மேலும் பார்க்க