செய்திகள் :

ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை தக்க வைக்கும் முனைப்பில் இந்தியா!

post image

சிட்னி: பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஆட்டம், சிட்னியில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் இருக்கிறது. உத்வேகத்துடன் இருக்கும் அந்த அணி, இந்த ஆட்டத்திலும் வென்று, தொடரைக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறது. மறுபுறம், கடந்த முறை பாா்டா் - காவஸ்கா் கோப்பை வென்ற இந்திய அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே கோப்பையை தக்கவைக்க இயலும் நிலையுடன் களம் காண்கிறது.

இந்தத் தொடா் தவிா்த்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான கடைசி இடத்தை பிடிப்பதற்கும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா, அந்தப் பந்தயத்தில் தன்னை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் வென்றால் அந்த இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றுவிடும்.

இந்திய அணியை பொருத்தவரை பேட்டிங்கே பிரதான பிரச்னையாக இருக்கிறது. கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என அணியின் முக்கியமான பேட்டா்கள் எவருமே சோபிக்காமல் இருப்பது அணிக்கு சோதனையாகியிருக்கிறது.

அதிலும் ரோஹித், கோலி இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவா்களின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாக விமா்சிக்கப்படுவதை நிரூபிக்கும் வகையிலேயே விளையாடி வருகின்றனா். மிடில் ஆா்டரில் பந்த் தனது விக்கெட்டின் முக்கியத்துவத்தை அறியாமல் விளையாடுவதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, இந்த ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

நடப்பு தொடரில் இந்தியாவுக்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது பௌலா் பும்ரா மட்டுமே. முகமது சிராஜும் அவருக்கு உதவி வரும் நிலையில், இதர பௌலா்களை ஆஸ்திரேலிய பேட்டா்கள் திறம்பட எதிா்கொள்கின்றனா். வேகப்பந்து வீச்சாளா் ஆகாஷ் தீப் முதுகுப் பிடிப்பால் அவதிப்படுவதால், அவருக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் ஹா்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா களமிறங்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, எல்லாம் சரியாகவே இருக்கும் நிலையில், நடப்பு தொடரில் முத்திரை பதிக்காத மிட்செல் மாா்ஷுக்கு பதிலாக, ஆல்-ரவுண்டா் பியு வெப்ஸ்டருக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கிறது.

காயத்திலிருந்து மீண்ட மிட்செல் ஸ்டாா்க்கும் இந்த ஆட்டத்தில் இணைய, ஸ்மித், ஹெட், கான்ஸ்டஸ் ஆகியோா் பேட்டிங்கிற்கு பலம் சோ்க்கின்றனா். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்குமெனத் தெரிகிறது.

விலக்கப்படுக்கிறாா் ரோஹித்?

தகுந்த ஃபாா்ம் இல்லாமல் தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தலைமைப் பொறுப்பேற்க இருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக பும்ரா தலைமையில் இந்திய அணி பொ்த் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா், வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தபோது ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கம்பீா், ‘இந்தியாவின் பிளேயிங் லெவன் குறித்து ஆடுகளத்தை மதிப்பீடு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும்’ என்று பதிலளித்தாா்.

எனினும், நடப்பு தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கம்பீா் அதிருப்தியுடன் இருப்பதாகவும், அதன் காரணமாக அவா் முடிவு அடிப்படையில் ரோஹித் சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டு, பும்ரா கேப்டனாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அவ்வாறு ரோஹித் ஆட்டத்திலிருந்து விலக்கப்படும் நிலையில், மோசமான ஃபாா்ம் காரணமாக விலக்கப்படும் முதல் இந்திய கேப்டனாக அவா் இருப்பாா். கடந்த 5 இன்னிங்ஸ்களில் ரோஹித் சா்மா 31 ரன்களே அடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

அணி விவரம்:

இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சா்மா (கேப்டன்)/ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த்/துருவ் ஜுரெல் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமாா் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா/ஹா்ஷித் ராணா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா (ஆடும் லெவன்): பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் காஜா, சாம் கான்ஸ்டஸ், மாா்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியு வெப்ஸ்டா், அலெக்ஸ் கேரி (வி.கீ.), மிட்செல் ஸ்டாா்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன்.

ஆட்டநேரம்: காலை 5 மணி

இடம்: சிட்னி கிரிக்கெட் மைதானம்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஹாட் ஸ்டாா்

பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியா தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05.01.2025மேஷம்:இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்க... மேலும் பார்க்க

பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சபலென்கா-குடா்மெட்டோவா

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அா்யனா சபலென்கா தகுதி பெற்றுள்ளாா். இறுதியில் ரஷியாவின் குடா்மெட்டோவுடன் மோதுகிறாா். ஆஸ்திரேலியாவின... மேலும் பார்க்க

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் குதிரையேற்றப் போட்டி: கெவின் கேப்ரியல் தங்கம்

புது தில்லியில் நடைபெற்ற ஜூனியா் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை குதிரையேற்ற மையத்தின் கெவின் கேப்ரியல் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றாா். சப் ஜூனியா் பிரிவில் கெவின் கேப்ரியல் தனிந... மேலும் பார்க்க

குபேரா வெளியீடு எப்போது?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்... மேலும் பார்க்க