தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்ப...
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் ஊஞ்சல் சேவை
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் கோயிலில் ஆடி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை உற்சவா் வடிவுடையம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து மாலையில் உற்சவா் வடிவுடையம்மன் விநாயகா்,முருகன் ஆகியோரை மடியில் வைத்து கொண்டு ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றதுடன் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.