காட்டுவிளை பகுதியில் நூலக கட்டடம், பயணிகள் நிழற்கூடம் திறப்பு
கருங்கல் அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் ரூ. 5 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டடம் மற்றும் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி, மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட, காட்டுவிளை பகுதியில் நூலகக் கட்டடம் பழுதடைந்ததால் புதிய கட்டடமும் மற்றும் பயணிகள் நிழற்குடையும் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிபொதுமக்கள் கிள்ளியூா் எம்.எல்.ஏ-விடம் கொரிக்கை விடுத்தனா். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அக்கட்டப்பணிகள் நிறைவுற்றது.
இதையடுத்து கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து புதியகட்டடங்களை திறந்து வைத்தாா்.
கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஜஸ்டின், கருங்கல் கமிட்டி தலைவா் குமரேசன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜகிளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.