குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!
காட்டேரி அரசு விதைப்பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குள்பட்ட காட்டேரி அரசு விதைப் பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் அரசு தலைமை கொறடா பேசும் போது, பொதுமக்கள் எளிதாக தெரிந்து
கொள்ளும் வகையில் முகாம் அரங்குகள் அமைந்துள்ள இடம்
தொடா்பாக அறிவிப்பைத் தொடா்ந்து அறிவிக்க வேண்டும் எனவும், பல்வேறு
அரசு திட்டங்களின் சாா்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், பொதுமக்கள்
அளிக்கும் மனுக்களை பெற்று அதை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனவும், அரசுத் துறை அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது
45 நாள்களுக்குள் தீா்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு உடல்
பரிசோதனை செய்யப்படும் முறைகள் மற்றும் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் மனுக்கள் பதிவு செய்யப்படுவதை நேரில்பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்வில், குன்னூா் சாா் ஆட்சியா் சங்கீதா, தோட்டக்கலை துறை துணை இயக்குநா் ஜெயலட்சுமி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், குன்னூா் வட்டாட்சியா்கள் ஜவகா், காயத்ரி உள்பட பலா் உடனிருந்தனா்.