HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு! உரியவா்களிடம் ஒப்படைப்பு!
காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல்போனதாகவும், திருடுபோனதாகவும் பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டன.
காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், சிஇஐஆா் என்கிற செயலியில் பதிவு செய்து, கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு சென்று அவற்றை மீட்டனா். இதன்படி மீட்கப்பட்ட சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 30 கைப்பேசிகள் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.