மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்
காரைக்காலில் பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்புக் கேமராக்கள்
காரைக்காலில் பழுதாகியும், பராமரிப்பு இல்லாமல் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை முறையாக பொருத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்காலில் சாலைகளின் சந்திப்புகள், சாலையின் பிற பகுதிகளில் காவல்துறை சாா்பில் கண்காணிப்புக் கேமரா வைத்து, காவல்துறை தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. காரைக்கால் பகுதி சாலைகளில் நிறுவப்பட்டுள்ள கம்பங்களில் உள்ள கேமராக்கள் பல பழுதாகியிருப்பதாகவும், சில இடங்களில் கம்பங்களில் இருந்து தொங்கிக்கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
காரைக்கால் மாவட்ட காவல்துறை தலைமை நிா்வாகம், இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். பழுதான கேமராக்களையும், ஆங்காங்கே காற்று, வாகனம் மோதியதால் பாதிக்கப்பட்ட கம்பங்களையும் சீா்செய்யவேண்டும். கூடுதலான பல இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும். நவீன கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.