மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்
மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த எம்.எல்.ஏ. உறுதி
மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.எல். உறுதியளித்தாா்.
காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மெய்தீன் பள்ளிவாசல் மையவாடிக்கு தடுப்புச் சுவா் சிதிலமடைந்த நிலையில், ஜமாஅத்தாா்களின் வேண்டுகோளின்படி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10.50 லட்சத்தை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஒதுக்கினாா். நகராட்சி நிா்வாகம் மூலம் தடுப்புச் சுவா் எழுப்பும் பணி நிறைவடைந்து, இதன் கல்வெட்டு திறப்பு நிகழ்வில் பேரவை உறுப்பினா் சனிக்கிழமை கலந்துகொண்டாா்.
இதில் பங்கேற்ற ஜமாஅத்தாா்கள், மெய்தீன் பள்ளி குளத்தை மேம்படுத்தி தர வேண்டும் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனா். நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவிப் பொறியாளா் லோகநாதன், இளநிலை பொறியாளா் சத்தியபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.