செய்திகள் :

காப்பகத்தில் திடீர் ஆய்வு; நலம் விசாரித்த முதல்வர்... `அப்பா' என‌ அழைத்து நெகிழ வைத்த மாணவர்கள்!

post image

விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக மாலையில், சூலக்கரை மேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு காப்பகம் மற்றும் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், கல்வி கற்பதில் அவர்களுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் இனிப்புகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். அப்போது பேசிய மாணவி ஒருவர், "மற்றவர்கள் உங்களை சந்திப்பது போல, நாங்கள் எல்லோரும் முதலமைச்சரை பார்ப்போமா என்று சந்தேகமடைந்தோம். நாங்கள் நினைத்த சமயத்தில் எங்கள் காப்பகத்திற்கு நேரடியாக வந்து எல்லோரையும் சந்தித்தது மிகுந்த மன மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை வந்து சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இனிப்புகள் வாங்கி கொடுத்து பரிசளித்துள்ளீர்கள். இதுமாதிரி பெற்றோர்கள் தான் எங்களுக்கு செய்ததுண்டு. இப்போது நீங்கள் செய்வதை பார்க்கையில் அவர்களை நினைவுபடுத்த தூண்டுகிறது" என்றார்.

காப்பக குழந்தைகளுடன்
பதிவு...

மாணவியின் இந்த நெகிழ்ச்சியான பேச்சையடுத்து சக மாணவர்கள் அனைவரும் அவரை உற்சாகப்படுத்த கைத்தட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆய்வை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பும்போது, மாணவ-மாணவிகள் அனைவரும் ஒருமித்த குரலில் 'Bye அப்பா' என முதலமைச்சரை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காப்பகத்தில் நடந்த இந்த தருணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் 'அப்பா.. நிறைவான நாள்' என குறிப்பிட்டு வீடியோவுடன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Rain Alert: நாளை 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோரப் பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று (நவம்பர் 12) அதிகாலை முதலே சில இடங்களில... மேலும் பார்க்க

``திமுக கூட்டணி உடையாது; அதிமுக வலுவாக இருக்க வேண்டும்!” - சொல்கிறார் பாஜக ராம ஸ்ரீநிவாசன்

``மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் திமுக-வை சாடியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?"``நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை என பாதிக்கு பாதிக்கு தி.மு.க சொல்வதை சொல்லிவிட்டு, நான் தி.மு.க-வுக்கு எத... மேலும் பார்க்க

திருவாரூர்: மழையில் நனையும் ரேஷன் பொருள்கள்... தார்ப்பாய் மூடிய நிலையில் நியாய விலைக்கடை..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் அமைந்துள்ளது மேல கொருக்கை நியாயவிலை கடை கட்டிடம். கடந்த ஜூன் மாதம் 2002-ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி உள்ளூர்... மேலும் பார்க்க

Sri Lanka: ``தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்" - இலங்கை அதிபர் அநுர குமார

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 55.89 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அநுர குமார திசாநாயக்க (AKD) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுர குமார வெற... மேலும் பார்க்க

ராஜபாளையம்: ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்... அவதியில் பயணிகள்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் ... மேலும் பார்க்க

திருவாரூர்: அடிப்படை வசதிகளற்ற புதிய பேருந்து நிலையம்; சிரமத்துக்குள்ளாகும் பயணிகள்!

திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம்- தஞ்சாவூர் சாலையில் 2019 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஆட்சி காலத்தில் 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பழைய பேருந்து நிலையத்தை ஒப்பிட்டு, மாவட்ட தலைந... மேலும் பார்க்க