செய்திகள் :

திருவாரூர்: அடிப்படை வசதிகளற்ற புதிய பேருந்து நிலையம்; சிரமத்துக்குள்ளாகும் பயணிகள்!

post image

திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம்- தஞ்சாவூர் சாலையில் 2019 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஆட்சி காலத்தில் 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பழைய பேருந்து நிலையத்தை ஒப்பிட்டு, மாவட்ட தலைநகரின் முக்கிய இடங்களான அரசு கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சி அலுவலகம், மாவட்ட கண்காணிப்பு அலுவலகம், வேளாண்மை துறை போன்ற முக்கிய அலுவலகங்களால் மக்கள் எளிதில் பயன்பெற வேண்டி 2019 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்திற்கு நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருச்சி, வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பேருந்து நிலையத்தினால் வெளியூர் பயணிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பேசினோம். ``கும்பகோணம் பக்கம்தான் எங்க ஊரு, திருவாரூரில் ஆறு மாசமா கடையில வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். இந்த பஸ் ஸ்டாண்டோட நிலை ரொம்ப மோசமா இருக்கு... இன்னும் சொல்லப்போனால் நாங்க நிக்கிற இடத்துல சரியான லைட் வசதி கிடையாது. இருட்டுல ஒருவித பயத்தோடவே பஸ்ஸுக்கு வெயிட் பண்ண வேண்டியிருக்கு. இதைப் பயன்படுத்திக்கிட்டு, சிலர் தவறாக நடந்துக்குறாங்க. இத்தனைக்கும் பக்கத்துலயே போலீஸ் பூத் இருக்கு. அதுல போலீஸ்காரங்களும் இருக்காங்க... இருந்தும் சிலர் தைரியமா, பாலியல் சீண்டல்கள்ல ஈடுபடுறாங்க. நைட் நேரத்துல இங்க வரவே அச்சமா இருக்கு" எனக் கவலையுடன் கூறினார்.

அருகில் இருந்த பெரியவர், ``இந்த பஸ் ஸ்டாண்ட்'ல மழைக்கு அங்கிட்டு இங்கிட்டும் ஒதுங்க முடியல, நாங்க நிக்க வேண்டிய இடத்துல ஆடு மாடு நிக்குது. நாங்க உட்கார வேண்டிய இடம் டீக்கடை பெஞ்சா மாறி இருக்கு... அவ்வளவு ஏன் ஒரு பஸ் ஸ்டாண்ட்'னா மக்களுக்கான அடிப்படை வசதியான இன்பர்மேஷன் சென்டர், ஏ.டி.எம், கழிப்பறை வசதி, பயணிகள் அமரும் இடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட சிறப்பம்சம் இருக்கணும். இந்த பிளாட்பார்ம்ல (A) அவை கிடையாது பிளாட்பார்ம் B'ல இருந்தாகூட அவ்வளவு சொல்லும்படி இல்லை" என்று ஆதங்கப்பட்டார்.

இதற்காக பிளாட்பார்ம் B'க்கு விசிட் அடித்தோம்... தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் அமருமிடம், ஏ.டி.எம், புறக்காவல் நிலையம், திருவாரூர் கோட்ட அலுவலகம் (TNSTC), நகராட்சி கழிப்பறை மற்றும் நகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பகம் போன்றவை செயல்பாடு இன்றியும், மின் விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை சரியாக இயங்காமலும் சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுக்கக்கூடியதாக இருந்தது.

இது குறித்து திருவாரூர் நகர் மன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினர் எஸ்.கலியபெருமாளிடம் பேசினோம். ``புதிய பேருந்து நிலையமானது அம்மா அவர்களின் ஆட்சியில் நிதி ஒதுக்கி, எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அக்கட்டடம் திறந்து வைத்தபோது இருந்த கட்டமைப்பின் தரம், தி.மு.க ஆட்சிக்காலத்தில் தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது. நகராட்சியின் கீழ் அமைந்துள்ள இரு சக்கர வாகன பாதுகாப்பகம் ஒதுக்கப்பட்ட இடத்தில் செயல்படாமல், பேருந்துகள் வந்து திரும்பும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வாகன ஓட்டிகளை ஒப்பந்தக்காரர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் பேருந்து ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அங்குள்ள வணிகர்களும் பயண நடைமேடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதாலும், இரவில் சரியாக மின்விளக்கு வசதி இல்லாததாலும் பயணிகள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.

கருணாநிதி அவர்களின் பெயரால் திருவாரூர் மையப்பகுதியில் அமைய உள்ள பேருந்து நிலையத்துடன் கூடிய வணிக வளாக கட்டடத்தினை கவனத்தில் கொள்ளும் திமுக அரசு, கட்டி முடித்து செயல்பாட்டிலுள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மழைக்காலத்தில் பொதுமக்களின் நிலையினை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் கட்சியின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று கூறினார்.

இது குறித்து திருவாரூர் நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு பேசிய போது, "இது போன்ற புகார்கள் இதுவரையிலும் எனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும் எங்களது சானிடைசிங் இன்ஸ்பெக்டரை ஆய்வு மேற்கொள்ள சொல்கிறேன். நேரம் கிடைக்கும் பட்சத்தில் நானும் நேரடியாக ஆய்வு செய்கிறேன்" என்று கூறினார்

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க