TVK: "கண்ணியம், பொறுமை, சகிப்புத்தன்மை..." - விவாதங்களில் பங்கேற்கும் தவெகவினருக்கு விஜய் உத்தரவு
விஜய்யின் த.வெ.க முதல் மாநாட்டிற்குப் பிறகு அரசியல் கட்சிகளும், பல அரசியல் தலைவர்களும் விஜய்யின் அரசியல் கொள்கைகள் குறித்தும், 2026 தேர்தல் வியூகம் குறித்தும் பேசி வருகின்றனர்.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகி விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைவதாகச் செய்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் த.வெ.க கட்சியால் வரும் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதற வாய்ப்பிருப்பதாகப் பல்வேறு பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் அடிபட்டு வருகின்றன.
நாம் தமிழர் மட்டுமில்லாமல், பல்வேறு கட்சியினர் விஜய்யின் அரசியலைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு த.வெ.க தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து சமூக வலைத்தளமே களேபரமாக்கி வருகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 13) த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் பனையூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, "'தமிழக வெற்றிக் கழகம்' சார்பில் விவாதங்களில் பங்கேற்போர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
எதிர் தரப்பினர் எப்படிப் பேசினாலும், தரம் தாழ்ந்து பேசினாலும்கூட, நாம் யாரையும் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. நாம் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊடகத்தில் விவாதங்களில் பங்கேற்போர் பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தரவுகளின் அடிப்படையில் சரியான, மிகத் தெளிவாக விவாதிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.