செய்திகள் :

திருவாரூர்: மழையில் நனையும் ரேஷன் பொருள்கள்... தார்ப்பாய் மூடிய நிலையில் நியாய விலைக்கடை..!

post image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் அமைந்துள்ளது மேல கொருக்கை நியாயவிலை கடை கட்டிடம். கடந்த ஜூன் மாதம் 2002-ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் நிதியில் கட்டப்பட்டது.

தற்போது இந்த நியாய விலை கடையின் கட்டடம் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மேற்கூரைகளின் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்கால பாதிப்பினால் மழைநீர் கசிகிறது என்பதற்காக தார்ப்பாயை கொண்டு மேற்கூரையை மூடி வைத்துள்ளனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்

இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் (தெற்கு) காரல் மார்க்ஸ் அவர்களிடம் பேசினோம், ``கொருக்கை ஊராட்சியில் மொத்தம் 1898 ரேஷன் அட்டைகள் உள்ளன. ஊராட்சியில் உள்ள மக்கள் 90 சதவிகிதத்தினர் அங்காடியில் கொடுக்கும் பொருள்களை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். கொருக்கைப் பகுதியில் நான்கு இடங்களில் அங்காடி செயல்பட்டு வருகிறது.  தலைக்காட்டில் 690 குடும்ப அட்டைகளும், மேலகொருக்கை அங்காடியில் கஜா புயலில் பாதிக்கப்பட்டு, அரசு இடிப்பதற்கு ஆணை பிறப்பித்த கட்டிடத்தில் 345 குடும்ப அட்டைகளும், கொருக்கை அங்காடியில் 666  குடும்ப அட்டைகளும், கீழகொருக்கை சமுதாய கூடத்தில்197 குடும்ப அட்டைகளும் இருக்கின்றன.

உலகாச்சிக்காடு, சேவிக்காடு, பெரிய கொருக்கை உள்ளிட்ட ஊர்களின் குடும்பங்கள் பயன்பெற்று வரும் கொருக்கை அங்காடியின் கட்டிடத்தின் மேற்கூரை, பாதிப்பினால் மழைநீர் ஒழுகுவதோடு, இடியும் தருவாயில் உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கொருக்கை தலைக்காடு, மேல கொருக்கை அங்காடியின் மேற்கூரை பலவீனமானதால் மழைக்காலத்தில் அங்காடியின் அரிசி முதலான பொருள்கள் நனைந்தபடியே மக்களுக்கு வழங்கப்படுகிறது.

நியாய விலைக்கடை

இதனால் சரியான எடையுடன் அரிசி கிடைப்பதில்லை. காரணம் கேட்டால் 'ஒழுகுது எங்களை என்ன பண்ண சொல்றீங்க இடவசதி அப்படி இருக்கு' என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக ஓராண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். திருத்துறைப்பூண்டி டிஎஸ்ஓ அதிகாரி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வாக்குறுதி கொடுத்தார். மேற்கொண்டு இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்களை திரட்டி தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்பதை இப்போது அறிவிக்கிறேன்" என்றார்.

இது குறித்து கொருக்கை ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமனிடம் பேசினோம். ``கொருக்கை நிரந்தர அங்காடியாகும். மேல கொருக்கையும், கீழகொருக்கையும் பகுதி நேர அங்காடியாகும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மூன்று குக்கிராமத்தில் உள்ள நியாயவிலை கட்டடத்தினை கவனத்தில் கொண்டு உரிய நிதியும் இடமும் ஏற்பாடு செய்து தர வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இடிந்து காணப்படும் கட்டடம்

இது குறித்து திருத்துறைப்பூண்டி கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் இன்ப கார்த்திக் அவர்களிடம் பேசியபோது, ``பகுதி நேர அங்காடியை பொறுத்தவரையில் ஊராட்சி மன்றத் தலைவர் ஏதாவது ஒரு கட்டிடத்தை தேர்வு செய்து தர வேண்டும். அப்படி தேர்வு செய்யும் பட்சத்தில் குறைந்த மாத கட்டணம் சாத்தியமானால் நடவடிக்கை எடுக்கப்படும். மேல கொருக்கை அங்காடிக்கு மாற்று இடம் இல்லாத காரணத்தால் அதே பழைய கட்டிடத்தில் இயங்குகிறது. இடம் உறுதியாகும் பட்சத்தில் கட்டிடத்தை இடித்து, ஊராட்சி மன்ற சார்பிலோ அல்லது கூட்டுறவின் சார்பிலோ மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏதாவது ஒரு திட்டத்தின் வாயிலாக புதிய கட்டிடம் கட்டித் தரப்படும்" எனக் குறிப்பிட்டார்.

ஆனால், அந்தப் பகுதி மக்கள், 'பழுதடைந்த நியாய விலை கடையை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்" என்றே அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ - ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள சாத்தனூர் அணையில் 119 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும்.சாத்தனூர் அணை திறப்பு: ராமதாஸ் அறிக்கை...தொடர் கனமழைக் காரணமாக, சாத்தனூர் அணை நிரம்... மேலும் பார்க்க

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் ... மேலும் பார்க்க

Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் மீது போடப்பட்ட மிரட்டல் வழக்கு 'தள்ளுபடி'

'ரெய்டு' என்றுக்கூறி தொழிலதிபர்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுக்க மிரட்டியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா, கர்நாடக மாநில முன்னாள் பாஜக தலைவர் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவ... மேலும் பார்க்க

Fengal: 'குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 நிவாரணம்' - 6 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழையில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட... மேலும் பார்க்க

``என் பொண்ணு போட்டிருந்த டிரஸ் கலர் தெரியும்; பொணத்தையாச்சும் கண்ணுல காட்டுங்க" - நொறுங்கிய தாய்

திருவண்ணாமலை, தீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடுத்தடுத்து 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் சிறுமி உட்பட மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.`பேரிடர் விபத்து ஏற்படப் போகிறது’ என்று வ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை நிலச்சரிவு: `இன்னும் ரெண்டு பேரை மீட்கல’ - போராட்டத்தில் கதறி அழுத உறவினர்கள்!

திருவண்ணாமலை, தீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.அடிவாரத்தில் இருந்து சுமார் 100 அடி உயரமுள்ள மலை முகட்டில் இருந்த ஒரு வீடே மண்ணுக்குள் புதைந்து காணாமல் போயிருக்கிறது. தகர... மேலும் பார்க்க