செய்திகள் :

திருவண்ணாமலை நிலச்சரிவு: `இன்னும் ரெண்டு பேரை மீட்கல’ - போராட்டத்தில் கதறி அழுத உறவினர்கள்!

post image
திருவண்ணாமலை, தீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

அடிவாரத்தில் இருந்து சுமார் 100 அடி உயரமுள்ள மலை முகட்டில் இருந்த ஒரு வீடே மண்ணுக்குள் புதைந்து காணாமல் போயிருக்கிறது. தகர ஷீட்டால் வேயப்பட்ட அந்த சிறிய வீட்டுக்குள் தங்கியிருந்த 5 சிறார்கள் உட்பட 7 பேருமே மண்ணுக்குள் உயிரோடு புதைந்துபோயிருக்கிறார்கள். மண் சரிவில் ராட்சத பாறைகளும் இழுத்து வரப்பட்டு வீட்டின் மீது குவியலாக விழுந்ததால், அந்த வீடு சுக்கு நூறாக உடைந்து போயிருக்கிறது. வீட்டுக்குள் இருந்த அனைவருமே உடல் நசுங்கி இறந்திருக்கின்றனர். புதைந்துபோன வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை மண் சரிவின் தாக்கம் இருந்திருக்கிறது. கிரிவலப் பாதையையொட்டிய வ.உ.சி நகரின் முகப்பில் இருந்த இருசக்கர வாகனங்களும்கூட புதைக்குழியில் சிக்கியதைபோல் காணப்பட்டன.

மீட்புப் பணி

டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணியளவில், இந்த கோரச் சம்பவம் நடந்தேறியது. ஆனால், அன்று பெய்த கனமழைக் காரணமாக மீட்புப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு 2-ம் தேதியான நேற்று காலையில்தான் மீட்புப் பணி தொடங்கப்பட்டது. ஆனாலும், ஹிட்டாச்சி வாகனம் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு பக்கெட்டாக மண் அள்ளப்பட்டு, பாறைகள் அகற்றப்பட்ட பிறகே உடல்கள் தென்பட்டன. சரியாக, நேற்று மாலை 5.49 மணிக்குத்தான் முதல் உடல் கிடைத்தது.

ஹிட்டாச்சி வாகனத்தின் பக்கெட் கொக்கியில் தொங்கியபடி 9 வயது சிறுவன் கௌதமின் உடல் மேலே வந்ததை பார்த்தபோது, நெஞ்சம் பதறிப் போனது. இதையடுத்து, 14 வயது சிறுமி வினோதினி, 12 வயது சிறுமி மகா, 7 வயது சிறுமி இனியா மற்றும் இனியாவின் தாயான 26 வயது பெண் மீனா ஆகிய நால்வரின் உடல்களும் அடுத்தடுத்து இடிபாடுகளில் இருந்து சிரமப்பட்டு மீட்கப்பட்டன.

ஈரமண்ணுக்குள் புதைந்துபோனதால் கை, கால்கள் பிய்த்துகொண்டதையும் பார்க்க முடிந்தது. உடல் பாகங்கள் சிதைவதை தடுக்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழிக்குள் இறங்கி, தார்ப்பாய் மூலமாக உடல்களை சுருட்டி மேலே கொண்டு வந்தனர். 5 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், வீட்டின் உரிமையாளரான ராஜ்குமார் மற்றும் அவரின் உறவினர் மகளான 12 வயது சிறுமி ரம்யா ஆகிய மேலும் இருவரை தேடும் பணியும் நேற்று இரவு 10 மணி வரை தொடர்ந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டுச் சென்றார்.

இதைத் தொடர்ந்து, மீட்புப் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு இன்று காலை 7 மணியளவில் மீட்புப் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. வீடு இருந்த இடத்தில் பெரிய ராட்சத பாறை கிடக்கிறது. அதை அகற்றினாலே மற்ற இருவரின் நிலையும் தெரியவரும் என்கின்றனர் மீட்புப் படையினர்.

போராட்டத்தில் கதறி அழுத உறவினர்கள்

இந்த நிலையில், `மீட்புப் பணியில் அலட்சியம் காட்டப்படுவதாக’ குற்றம்சாட்டி இறந்தவர்களின் உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ``வீட்டோடு புதைஞ்சிப்போய் இன்னையோட மூணு நாள் ஆகுது. அஞ்சிப்பேர் உடல்களைத்தான் மீட்டிருக்கிறாங்க. இன்னும் ரெண்டுப் பேரை மீட்கல. சம்பவம் நடந்த அன்னைக்கு மழை வந்துச்சு. அதனால மீட்புப் பணியில உடனடியாக ஈடுபட முடியலனு சொன்னாங்க. ஆனா, நேத்தைக்கு மழை அவ்ளோ இல்ல. தூரல் மட்டும்தான் போட்டுக்கிட்டிருந்துச்சி. ஆனாலும், நேத்து சாயிங்காலத்துக்கு அப்புறமாத்தான் புதைஞ்சிப்போனவங்கள பொணமா மீட்டாங்க. எங்ககிட்ட ஏழுப் பேரையும் மீட்டுட்டதாக முதல்ல சொன்னாங்க. ஆனா, இன்னும் ரெண்டு பேர் நிலைமையே தெரியல. அதிகாரிங்க வராங்க. போறாங்க. எங்கக்கிட்ட எந்த தகவலையுமே சொல்ல மாட்டிக்கிறாங்க. உடனடியா, மத்த ரெண்டு பேரையும் மீட்கணும்’’ என்கின்றனர் கண்ணீர் விட்டு அழுதபடியே.

``ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கும்போதே, அதானி சந்திப்பு உறுதியாகிறது..!” - NTK கார்த்திகைச்செல்வன்

``அதானி விவகாரத்தில் தி.மு.க-வை டார்கெட் செய்யும் நாம் தமிழர், பா.ஜ.க-வை கண்டுகொள்வதில்லையே.. அதானியை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த உங்களுக்கும் தயக்கமா?” ``அதானி மூலமாக ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்... மேலும் பார்க்க

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி; 78 பேர் அதிரடி பணி நீக்கம் - நெல்லை மண்டலத்தில் பரபரப்பு!

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிக்களுக்கான பணியிடத்தில் போலி சான்றிதழ் வழங்கி அரசு பணியில் சேர்ந்த 78 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஒரே வெள்ளத்தில் நொறுங்கிய புதிய பாலம்; திராவிட மாடல் மீது எடப்பாடி விமர்சனம் - கள நிலவரம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை,... மேலும் பார்க்க

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ - ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள சாத்தனூர் அணையில் 119 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும்.சாத்தனூர் அணை திறப்பு: ராமதாஸ் அறிக்கை...தொடர் கனமழைக் காரணமாக, சாத்தனூர் அணை நிரம்... மேலும் பார்க்க

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் ... மேலும் பார்க்க

Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் மீது போடப்பட்ட மிரட்டல் வழக்கு 'தள்ளுபடி'

'ரெய்டு' என்றுக்கூறி தொழிலதிபர்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுக்க மிரட்டியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா, கர்நாடக மாநில முன்னாள் பாஜக தலைவர் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவ... மேலும் பார்க்க