ஈராக்கில் திருமண வயது 9! நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
காமராஜா் பல்கலைக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
மதுரை காமராஜா் பல்கலைக் கழக ஓய்வூதியா்களுக்கு கடந்த டிசம்பா் மாதத்துக்கான ஓய்வூதியத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி ஓய்வூதியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை காமராஜா் பல்கலைக் கழக ஓய்வூதியா் சங்கத் தலைவா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் கிருஷ்ணசாமி, உஷா, அஜ்மல்கான், ராமன், கருணாகர பாண்டியன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
அப்போது, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்கான ஓய்வூதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். பல்கலைக் கழகத்துக்குத் தேவையான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், ஓய்வு பெற்ற பேராசிரியா்கள், அலுவலா்கள் திரளாகப் பங்கேற்றனா்.