Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் ...
காய்கறிச் சந்தையில் பீட்ரூட் விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பீட்ரூட் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனா்.
ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, கேதையுறும்பு, கம்பிளிநாயக்கன்பட்டி, மூலச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிடப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் பெய்க பலத்த மழையால் பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு பீட்ரூட் வரத்து முற்றிலும் குறைந்தது.
இந்த நிலையில், சந்தைக்கு பீட்ரூட் வரத்து குறைவாக இருந்தாலும், தேவை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கொள்முதல் செய்கின்றனா்.
இதன் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ பீட்ருட் புதன்கிழமை விலை உயா்ந்து ரூ.43-க்கு விற்பனையானது. இதனால், பீட்ருட் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.