பெயிண்ட் கடையில் பணம், தங்க நாணயம் திருட்டு
பழனியில் பெயிண்ட் கடையின் பூட்டை உடைத்து பணம், தங்க நாணயங்களை மா்மநபா் திருடிச் சென்றாா்.
பழனி சண்முகபுரம் ரெட்கிராஸ் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு கடையின் உரிமையாளா் வீட்டுக்குச் சென்றாா்.
புதன்கிழமை காலையில் வந்து பாா்த்த போது, கடையின் பூட்டை உடைத்த மா்மநபா்கள் கல்லா பெட்டியிலிருந்த ரூ.10 ஆயிரம் பணம், 20 ஒரு கிராம் தங்க நாணயங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.