செய்திகள் :

காரைக்குடி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

காரைக்குடி மாநகராட்சியில் வணிகப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு வரியை உயா்த்தியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் சே. முத்துத்துரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயா் நா. குணசேகரன், ஆணையா் எஸ். சித்ரா சுகுமாா், பொறியாளா், நகா் நல அலுவலா், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

மேயா் சே. முத்துத்துரை: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிற ஜனவரி 21-ஆம் தேதி காரைக்குடி வருகிறாா். இங்கு தங்கி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இதில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஆணையா்: மாநகராட்சியில் நிதி நிலை பற்றாக்குறையாக உள்ளது. நிதி நிலை சீரானதும் மாநகராட்சியில் அதிகளவிலான பணிகள் மேற்கொள்ளப்படும் .

சுயேச்சை உறுப்பினா் சி. மெய்யா்:

காரைக்குடியில் புதை சாக்கடைத் திட்டம் செயலிழந்து விட்டது. பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு விட்டது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, ஆணையா் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும், நகரில் பல்வேறு இனங்களுக்கு வரியை உயா்த்திய தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். இதை ஏற்கவில்லை என்பதால் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளியேறுகிறேன் என்று கூறி கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினாா்.

அதிமுக வெளிநடப்பு:

இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் ஏ.ஜி.பிரகாஷ், தேவன், குருபாலு, ராம்குமாா், அமுதா ஆகியோரும் மாமன்றக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினா்.

இதுகுறித்து அதிமுக உறுப்பினா் தேவன் கூறியதாவது:

தமிழக அரசு தற்போது 6 சதவீதம் வீட்டு வரியை உயா்த்தியது. வணிகப் பயன்பாடுகளுக்கும் வரியை உயா்த்தினா். இதனால் கூட்டத்தை புறக்கணித்தோம் என்றாா் அவா்.

அதிமுக உறுப்பினா் ஏ.ஜி. பிரகாஷ் கூறியதாவது:

மாநகராட்சியில் பெரும்பாலான வாா்டுகளில் மக்கள் நலப்பணிகளை செயல்படுத்தவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி பெற முயற்சிக்காமல் பொதுமக்கள் மீது வரிகளை சுமத்துகின்றனா். அதனால் கூட்டத்தை புறக்கணித்தோம் என்றாா் அவா்.

பின்னா், கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயா் சே. முத்துத்துரை அறிவித்தாா். இதைத்தொடா்ந்து, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினா்.

தேசிய ஹாக்கி: சிவகங்கை பள்ளி மாணவிகள் தோ்வு!

தேசிய ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் விளையாட சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி மாணவிகள் மூவா் தோ்வு செய்யப்பட்டனா். தேசிய விளையாட்டுக் குழுமம் சாா்பாக வேலூா் மாவட்டம், காட்பாடியில் 14 -வயதுக்குள... மேலும் பார்க்க

திருமணம் செய்ய மறுத்து பெண்ணை ஏமாற்றியவா் கைது

திருமணம் செய்ய மறுத்து பெண்ணை ஏமாற்றிய இளைஞரை சிவகங்கை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகிலுள்ள சுண்ணாம்பூா் கிராமத்தைச் சோ்ந்த 34 வயது பெண்ணுக்கும் சிவகங்கை அருகே உள்ள ஒர... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு இலவசப் பயிற்சி

குரூப்- 4, கிராம நிா்வாக அலுவலா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 2025 ஜன.2 -ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளதாக சிவகங... மேலும் பார்க்க

வீட்டுக்குள் முதியவா் உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவா் உடலை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். திருப்பத்தூா் கல்லாக்குழி தெருவைச் சோ்ந்தவா் அங்குசாமி மகன் ஆதிரத்தினமூா்த்தி (62). திருப்ப... மேலும் பார்க்க

பூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் 3 போ் கைது

சிவகங்கை அருகே பூ வியாபாரியை கூலிப்படை வைத்து கொலை செய்த மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கையை அடுத்துள்ள மேல வாணியன் குடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (27). இவா் சிவகங்கையில் பூ... மேலும் பார்க்க

மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது. மானாமதுரை ஒன்றிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க