செய்திகள் :

கார் பந்தயம்... 3 ஆம் இடம் பிடித்த அஜித் அணி!

post image

நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்துள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.

தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றனர்.

இந்த நிலையில், நேற்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்து அசத்தினர்.

விருது நிகழ்வின்போது அஜித்தின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

இதையும் படிக்க: ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்

ajith kumar racing team won in 24H car racing at spain

காந்தாரா யுனிவர்ஸ் வருமா? ரிஷப் ஷெட்டி பதில்!

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.முதல் பாகம... மேலும் பார்க்க

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் பொன்னி தொடர் நாயகன்!

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு பொன்னி தொடர் நாயகன் சபரி செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்... மேலும் பார்க்க

காந்தாரா - 1 முன்பதிவு துவக்கம்!

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக... மேலும் பார்க்க

இராமாயணம் நிறைவு: இன்று முதல் புதிய இதிகாச தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் 427 எபிசோடுகளுடன் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில... மேலும் பார்க்க

அனுஷ்காவுக்கு 2-வது தங்கம்: வெள்ளி வென்றாா் அட்ரியன்!

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிா் தனிநபா் பிரிவில், அனுஷ்கா தாகுா் 461 புள்ளிகளுடன் தங்கத்தை ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்!

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இ... மேலும் பார்க்க