காற்று மாசு - போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க அரசு அலுவலகங்களுக்கு புதிய பணிநேர அட்டவணை தில்லி முதல்வா் அறிவிப்பு
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தேசிய அளவில் மாசு அளவைக் குறைக்கவும் தில்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய பணிநேர அட்டவணையை முதல்வா் அதிஷி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
புதிய அட்டவணையின்படி, தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) அலுவலகங்கள் காலை 8.30 முதல் மாலை 5 வரையும், மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 முதல் மாலை 5.30 வரையும், தில்லி அரசு அலுவலகங்கள் காலை 10 முதல் மாலை 6.30 வரையும் செயல்படும்.
தில்லியில் குறிப்பிட்ட நேரத்தில் வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
நாட்டிலேயே தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ‘கடுமை’ பிரிவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.