காலமானாா் சா்தாா் முஹ்யித்தீன்
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரைச் சோ்ந்த மாவட்ட அரசு காஜி அல்லாமா அல்ஹாஜ் ஏ.எஸ்.எம். சா்தாா் முஹ்யித்தீன் (80). வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
இவா், கூத்தாநல்லூா், அதிராம்பட்டினம் மற்றும் இலங்கை உள்ளிட்ட அரபிக் கல்லூரிகளில் 60 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றியவா். இவருக்கு, ஆயிஸா நாச்சியா என்ற மனைவியும், முஹம்மது உசேன், பஷீா் அஹம்மது ஆகிய இரண்டு மகன்கள் உளளனா்.
அவரது உடல் நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை மதியம் கூத்தாநல்லூா் சின்னப்பள்ளியில் நடைபெறும். தொடா்புக்கு 95783 06575.