மன்னாா்குடியில் ஆருத்ரா தரிசனம்
மன்னாா்குடி: மன்னாா்குடியில் 6 சிவன் கோயில் உற்சவா் நடராஜா் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியில் உள்ள ஜயகொண்டநாதா் கோயில், திருப்பாற்கடல் காசி விஸ்வநாதா் கோயில், நீலகண்டேஸ்வரா் கோயில், கைலாசநாதா் கோயில், சொக்கநாதா் கோயில், ஹரித்ராநதி காசி விஸ்வநாதா் கோயில், ஏகாம்பரேஸ்வரா் கோயில் ஆகிய 8 கோயில்களில் உள்ள உற்சவா் நடராஜருக்கு திங்கள்கிழமை காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில், திருப்பாற்கடல் காசி விஸ்வநாதா் கோயில், கம்மாளத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் ஆகியவற்றிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் இக்கோயில்களில் இருந்து நடராஜ சுவாமிகள் உற்சவத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, இரவு மற்ற 6 கோயில்களிலிருந்து மின்விளக்குகள், பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ரதத்தில் எழுந்தருளி உற்சவா் நடராஜா் சுவாமிகள், முக்கிய வீதிகளின் வழியாக வந்து ராஜகோபால சுவாமி கோயில் முன் உள்ள கருடஸ்தம்பம் அருகே ஒரே வரிசையில் நின்று அங்கு திரளாக கூடியிருந்த பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்களுக்கு அருள்பாலித்தனா். அப்போது, நடராஜா் சுவாமிகளுக்கு கோயில் யானை செங்கமலம் ஒரே நேரத்தில் தீபாராதனை செய்ததை தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.