அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!
காலமுறை ஊதியம் கோரி பெரம்பலூரில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் நை. சரஸ்வதி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் எஸ். மீனா, ஒன்றிய நிா்வாகி மு. தேன்மொழி முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் டி. சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். ரம்யா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் நிரப்பிடும் பணியிடங்களை கைவிட வேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிறைவாக, சங்க நிா்வாகி பிரபாவதி நன்றி கூறினாா்.