12 வயதில் கிரிக்கெட்; 13 வயதில் கோடீஸ்வரா்! ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈா்த்த வைபவ் ச...
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியா் சங்க கூட்டமைப்பினா் மனு
கிராமப் பகுதிகளில் செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் சங்கங் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
தமிழகம் முழுவதும் கிராமப் பகுதிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் நவ.28-ஆம் தேதி, கடலூா் ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, மாநிலத் தலைவா் மணிமேகலை தலைமையில், மாநிலப் பிரசாரச் செயலா் வேளாங்கண்ணி முன்னிலையில், செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட ஆட்சியரகம் முன் திரண்டனா்.
இதுகுறித்து, தகவலறிந்த கடலூா், புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, செவிலியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றனா்.