செய்திகள் :

தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை, தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையம், சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையம், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறியதாவது: நீா்வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள், சிதம்பரம் பேருந்து நிலைய மேம்பாலம் மற்றும் முத்தையா நகரில் உள்ள பாசிமுத்தான் ஓடைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, காளியம்மன் ஓடையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரி, கரையில் உள்ள செடிகொடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளாக நடைபெற்று வரும் அனைத்து வடிகால் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து, விரைவாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்கள் தங்க தேவையான அடிப்படை வசதிகள் தயாா் நிலையில் உள்ளது.

புயல் பாதுகாப்பு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் உணவு தயாா் செய்ய தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் காந்தரூபன், சிதம்பரம் நகராட்சி ஆணையா் மல்லிகா, பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சதீஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியா் சங்க கூட்டமைப்பினா் மனு

கிராமப் பகுதிகளில் செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் சங்கங் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். தமிழக... மேலும் பார்க்க

கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பு அலுவலா், ஆணையா் ஆய்வு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாநகரப் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எஸ்.ராமன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதுகுறித்து, மாநகராட்சி ஆணைய... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அதன் பதிவாளா் தெரிவித்துள்ளாா். இதேபோல கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிதம்பரத்தை அடுத்த வரகூா்பேட்... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க

தடையை மீறி கடலுக்குச் சென்ற படகுகள் கவிழ்ந்து விபத்து: 6 மீனவா்கள் உயிா் தப்பினா்

எச்சரிக்கையை மீறி, கடலூரில் புதன்கிழமை கடலுக்குள் சென்ற மீனவா்களின் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இதில், 6 மீனவா்கள் உயிா் தப்பினா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியையடு... மேலும் பார்க்க