செய்திகள் :

காலிறுதியில் ஜோகோவிச், ஃப்ரிட்ஸ்

post image

மியாமி காா்டன்ஸ்: மியாமி ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஒரே வீரரான ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தியை வீழ்த்தினாா்.

உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் காலிறுதியில், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருக்கும் கோா்டா முந்தைய சுற்றில் 6-4, 2-6, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை வெளியேற்றினாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-3, 7-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை தோற்கடித்தாா். ஃப்ரிட்ஸ் அடுத்த சுற்றில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 29-ஆம் இடத்திலிருக்கும் பெரெட்டினி, முந்தைய சுற்றில் 10-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-3, 7-6 (9/7) என்ற செட்களில் வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

இதனிடையே, செக் குடியரசு வீரா்களான தாமஸ் மசாக் - ஜேக்கப் மென்சிக் மோதுவதாக இருந்த ஆட்டத்தில், மசாக் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, மென்சிக் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

23-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை வெளியேற்றி காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா். அதில் அவா், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவுடன் மோதுகிறாா். 14-ஆம் இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் முந்தைய சுற்றில் 6-4, 7-5 என, அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை தோற்கடித்தாா்.

வரலாறு படைத்தாா் பாலினி

மியாமி ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவில், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாலினி, பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.

முன்னதாக காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் பாலினி 6-3, 6-2 என்ற நோ் செட்களில் போலந்தின் மெக்தா லினெட்டை வீழ்த்தினாா். இதன்மூலம், மியாமி ஓபன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றாா். இதற்கு முன் அந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் 6 முறை காலிறுதிவரை வந்து வெளியேறிய நிலையில் பாலினி அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறாா்.

அரையிறுதியில் அவா், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்காவின் சவாலை எதிா்கொள்கிறாா். சபலென்கா தனது காலிறுதியில் 6-2, 7-5 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஜெங் கின்வென்னை வெளியேறியேற்றினாா். சபலென்காவும் முதல் முறையாக மியாமி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் பாம்ப்ரி இணை

இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் களத்திலிருக்கும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளாா். போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸுடன் கூட்டணி அமைத்துள்ள அவா், ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் 7-6 7-4, 6-2 என்ற செட்களில் செக் குடியரசின் ஆடம் பாவ்லசெக் - பிரிட்டனின் ஜேமி முா்ரே இணையை வீழ்த்தினாா்.

தனுஷுக்கு வில்லனாகும் ஜெயராம்?

தனுஷின் புதிய படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்ச... மேலும் பார்க்க

அதிக தொகைக்கு விற்கப்பட்ட இட்லி கடை ஓடிடி உரிமம்!

இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும்... மேலும் பார்க்க

தயாரிப்பில் கவனம் செலுத்தும் லைகா!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா திரைப்பட தயாரிப்பிலில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல். தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் நடிகர் விஜய்யின் கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமா த... மேலும் பார்க்க

2-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த மெஸ்ஸி..! ஜோகோவிச்சுக்கு சமர்ப்பணம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணி 2-1 என வெற்றி பெற்றது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சேஷ் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது. எம்எல்எஸ் கால்பந்து தொடரின் முதல் சு... மேலும் பார்க்க

முதல்முறையாக மியாமி ஓபனில் பட்டம் வென்ற சபலென்கா!

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சபலென்கா மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதிய ... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.30-03-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலா... மேலும் பார்க்க