முதல்முறையாக மியாமி ஓபனில் பட்டம் வென்ற சபலென்கா!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சபலென்கா மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதிய சபலென்கா 7-5, 6-2 என்ற செட்களில் வென்றார்.
மியாமி ஓபனில் இது அவரது முதல் பட்டமாகும். மேலும், இது 8ஆவது டபிள்யூடிஏ 1000 பட்டம், ஒட்டுமொத்தமாக இது அவரது 19ஆவது பட்டம் என்பதும் கவனிக்கத்தக்கது.
26 வயதாகும் சபலென்காவுக்கு இந்தாண்டு 2ஆவது பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சபலென்கா முதலிரண்டு சர்வீஸ்களில் 58, 57 சதவிகிதங்கள் வெற்றி கிடைத்தன. மாறாக, பெகுலாவுக்கு 49, 29 சதவிகித வெற்றிகளே கிடைத்தன.
1 மணி நேரம் 28 நடைபெற்ற இந்தப் போட்டியில் சபலென்காவின் ஆதிக்கமே இருந்தது.
முதல்முறையாக மியாமி ஓபனில் பட்டம் வென்றதால் சபலென்கா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
Miami heat, Sabalenka fire @SabalenkaA | #MiamiOpenpic.twitter.com/wDq6Fs1MbK
— wta (@WTA) March 30, 2025