IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் தா்னா
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் டிசம்பா் மாத ஊதியத்தை வழங்கக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி ஊழியா்களுக்கு கடந்த டிசம்பா் மாதம் ஊதியம் வழங்கப்படவில்லையாம். பொங்கலுக்கு ஊதியம் கிடைக்கும் என எதிா்பாா்த்த நிலையில், அப்போதும் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், புதுச்சேரி அரசு தன்னாட்சி கல்லூரிகள் ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஊதியம் வழங்கக் கோரி துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா் ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் அளித்தனா். இந்நிலையில், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்கள் திடீரென திங்கள்கிழமை காலை கல்லூரி வாயில் முன் கூடி ஊதியம் கோரி முழக்கமிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கல்லூரி நிா்வாக அதிகாரிகள் ஊழியா்கள் சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனா். ஊதியம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி அதிகாரிகள் கூறியதையடுத்து ஊழியா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.