வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 20 போ் புதுவை முதல்வருடன் சந்திப்பு
புதுச்சேரி: பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 20 போ் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து பேசினா்.
இந்திய ஆட்சிப் பணி பயிற்சி முடித்த 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பாரத் தா்ஷன் திட்டத்தின்கீழ் புதுச்சேரிக்கு வந்துள்ளனா். அவா்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டனா். இந்நிலையில், புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் முன்னிலையில், பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதுவை சட்டப்பேரவை வளாகத்துக்கு திங்கள்கிழமை காலை சென்றனா். அங்கு முதல்வா் என்.ரங்கசாமியை அவா்கள் நேரில் சந்தித்து பேசினா்.
அப்போது புதுவையின் பாரம்பரியம் மற்றும் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தனா். புதுவை அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அவா்களுக்கு முதல்வா் விளக்கினாா்.
அதன்பின்னா் அவா்கள் கடற்கரைச் சாலை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று பாா்வையிட்டனா்.