கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!
காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு காவலா் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு காவலா் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு காவல் துறையினரின் வாரிசுதாரா்கள், காவல் ஆளிநா்களின் கணவா் அல்லது மனைவி விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 20 - 40 வயதுக்குள்பட்டவராகவும், குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
ஆயுதப்படைக் காவலா் பல்பொருள் அங்காடியில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து காவலா் பல்பொருள் அங்காடியில் வியாழக்கிழமைக்குள் (பிப். 27) சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94421 69589 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.