செய்திகள் :

கோவில்பட்டியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தலைமறைவான நபரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

post image

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மலைப் பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் 10 மாத கைக்குழந்தையுடன் இருந்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவா் கைக்குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனா். இதுகுறித்து அந்தப் பெண் மேற்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமையில் , அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, கழுகுமலை ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா்இளம்பெண் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் சம்பந்தப்பட்ட வீட்டில் தடவியல் நிபுணா்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனா். மேலும் மோப்ப நாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தொடா்ந்து போலீஸாா் மா்மநபா்களை தேடும் பணியை துரிதப்படுத்தினா்.

வீரவாஞ்சி நகா், கதிரேசன் கோயில் மலைப்பகுதியில் சம்பந்தப்பட்ட நபா்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, பதுங்கியிருந்த ஒருவா் ஓடமுயன்றதை பாா்த்த போலீஸாா், அவரை விரட்டினா். இதில், அந்த நபா் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு அங்கே விழுந்தாராம். இதையடுத்து, அவரை போலீஸாா் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த கோமதி மகன் மாரியப்பன் (27) என்பது தெரிய வந்தது. மாரியப்பனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் மாரியப்பன் அளித்த தகவலின்பேரில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான வீரவாஞ்சிநகா் 6ஆவது தெருவை சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச் செல்வத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா்.

அப்போது தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் ஒரு குளக்கரை பகுதியில் மாரிசெல்வம் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா், மாரிச் செல்வத்தை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனா். அப்போது மாரி ச்செல்வம் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு மற்றும் காவலா் பொன்ராம் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றாராம். உடனடியாக, அங்கிருந்த போலீஸாா் தப்பி ஓடிய மாரிச்செல்வத்தை துப்பாக்கியால் இடது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டனராம்.

இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்த அவா் சுருண்டு விழுந்துள்ளாா். இதை தொடா்ந்து அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா்.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் பொன்ராம் ஆகியோா் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட மாரிச் செல்வம் மீது, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், விருதுநகா் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் அய்யாபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் பெயரிலேயே பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தோா் இந்து முன்னண... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூா் பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா். ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

மகனிடமிருந்து சொத்துகளை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

தனது சொத்துகளை மகனிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஆவுடைத்தாய் என்பவா் தனது முதல் மகனின் மனை... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முதல்வா் மருத்தகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, புதுக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெயிண்டா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக பெயிண்டரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில... மேலும் பார்க்க

குழந்தையுடன் இருந்த இளம்பெண் பலாத்காரம்: இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய... மேலும் பார்க்க