செய்திகள் :

காவல் உயர் அதிகாரி வீட்டு வாசலில் 80 வயது முதியவர் கொலை!

post image

ஒடிசாவில் காவல் உயர் அதிகாரி வீட்டின் வாசலின் முன்பு 80 வயது முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நுவாபாடா மாவட்டத்தின் சிர்டோல் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சாஹு (வயது 80) எனும் முதியவர், நேற்று (மார்ச்.3) அதிகாலை 4 மணியளவில் பூக்கள் பரிப்பதற்காக அருகிலுள்ள வனப்பகுதியை நோக்கி நடத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் நுவாபாடா காவல் உயர் அதிகாரி (எஸ்.பி) வீட்டின் வாசலின் அருகில் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த முதியவரின் தலையில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அதிகாரியின் வீட்டு காவலாளி அங்கு சென்று பார்த்தபோது அந்த முதியவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்துள்ளார். ஆனால், அதற்குள் அந்த கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த முதியவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அந்த சோதனைக்கு பின்னர் முதியவரின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பலியான முதியவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், வயது முதிர்வினால் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருந்த முதியவரின் கொலையில் தங்களுக்கு யார் மீது சந்தேகமில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, முதியவரின் கொலையினால் நுவாபாடா பகுதியிலுள்ள சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் இருக்க அப்பகுதியின் பாதுகாப்பை அதிகரித்து, போலீஸாரின் ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரின் ராஜிநாமாவை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.4) ஏற்றுக்கொண்டுள்ளார்.மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸைச் (அஜித் பவார்) சேர்ந்... மேலும் பார்க்க

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான ந... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கி.மீ ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று (மார்ச்.4)... மேலும் பார்க்க