பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து
காவல்துறை சாா்பில் இன்று குறைகேட்பு முகாம்
காரைக்கால் காவல்துறை சாா்பில் காவல் நிலையங்களில் குறை கேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
புதுவை டிஜிபி அறிவுறுத்தலின்பேரில், காவல்துறை சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் என்கிற குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறும் நடத்தப்படுகிறது.
நிகழ்வாரம் 5-ஆம் தேதி சனிக்கிழமை நிரவி காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில் திருப்பட்டினம், காரைக்கால் நகரம், நிரவி சரக காவல் அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள்.
கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் முகாம் நடைபெறுகிறது. இதில் கோட்டுச்சேரி, திருநள்ளாறு, நெடுங்காடு, போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.