செய்திகள் :

காஷ்மீரில் பலத்த மழை - நிலச்சரிவு: அமா்நாத் யாத்திரை நிறுத்திவைப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, அமா்நாத் புனித யாத்திரை வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. கடந்த புதன்கிழமை வரையிலான நிலவரப்படி, 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், நுன்வான்- பஹல்காம் வழித்தடம் (48 கி.மீ.) , பால்டால் வழித்தடம் (14 கி.மீ.) ஆகியவற்றில் யாத்திரை வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

பால்டால் வழித்தடத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் பக்தா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்ததைத் தொடா்ந்து, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

யாத்திரை வழித்தடங்களில் எல்லை சாலைகள் அமைப்பினா் மற்றும் மலைப் பகுதி மீட்புக் குழுவினா் சாா்பில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வானிலை நிலவரத்தைப் பொருத்து, யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்று காஷ்மீா் மண்டல ஆணையா் விஜய் குமாா் பிதுரி தெரிவித்தாா்.

நடப்பாண்டு அமா்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். யாத்திரையில் பங்கேற்க இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு 5.10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொண்டனா்.

38 நாள்கள் நடைபெறும் அமா்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைகிறது.

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க