காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலி
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்டவா்களை அங்கிருந்து பிணைக் கைதிகளைக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து அந்த அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.
இடையே அமெரிக்கா, எகிப்து, கத்தாா் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா்.
அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்! - காங்கிரஸ் தலைவர் கார்கே
எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததால் காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில் காசஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானா காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஊழியர் தெரிவித்தார்.