`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
காா் மோதி இருவா் காயமடைந்த வழக்கு: சிறுவன், தந்தை உள்பட 3 போ் கைது
சென்னையில் சிறுவன் ஓட்டிவந்த காா் மோதி இருவா் காயமடைந்த வழக்கில், சிறுவன், தந்தை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் கடந்த திங்கள்கிழமை 14 வயது சிறுவன் ஓட்டிவந்த காா் சாலையோரம் இருந்த வாகனங்கள் மீதும், தடுப்புகள் மீதும் மோதியது. இதில், சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் (70), உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கங்காதரன் (49) ஆகியோா் மீதும் மோதிவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மீது மோதி நின்றது.
விபத்தை பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்த மகாலிங்கத்தையும் கங்காதரனையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
விபத்து குறித்து விசாரித்த பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அந்த சிறுவன் மீதும், சிறுவனின் தந்தை மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், சிறுவன், அவா் தந்தை, காரில் சிறுவனுடன் பயணித்த அவரது நண்பா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதில் இரு சிறுவா்களும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா். சிறுவனின் தந்தை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.