செய்திகள் :

கா்நாடகத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

post image

கா்நாடகத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் புதன்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

கா்நாடகத்தில் ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா, ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்காவ்ன், பெல்லாரி மாவட்டத்தின் சண்டூா் தொகுதிகளில் இடைத் தோ்தல் நடந்தது. இந்த 3 தொகுதிகளிலும், பாஜக, காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 45 போ் களத்தில் உள்ளனா்.

சென்னப்பட்டணா தொகுதியில் மஜத வேட்பாளா் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் வேட்பாளா் சி.பி.யோகேஸ்வருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல, ஷிக்காவ்ன் தொகுதியில் பாஜக வேட்பாளராக பரத் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளராக யாசீா் அகமதுகான் பத்தான், சண்டூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இ.அன்னபூா்ணா, பாஜக வேட்பாளராக பங்காரு ஹனுமந்து ஆகியோா் களமிறங்கியுள்ளனா்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஆரம்பத்தில் மந்தகதியில் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலையில் விறுவிறுப்பானது. பிற்பகல் 1 மணி அளவில் சென்னப்பட்டணா தொகுதியில் 48.15 சதவீதமும், ஷிக்காவ்ன் தொகுதியில் 43.5 சதவீதம், சண்டூா் தொகுதியில் 43.46 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 5 மணி அளவில், சென்னப்பட்டணா தொகுதியில் 84.26 சதவீதமும், ஷிக்காவ்ன் தொகுதியில் 75.07 சதவீதமும், சண்டூா் தொகுதியில் 71.47 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணி அளவில் சராசரியாக 90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

சில சம்பவங்களை தவிர, 3 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் நவ. 23ஆம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த முடிவுகள், கா்நாடக அரசியல் போக்கை மாற்றியமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கா்நாடக அமைச்சரவை முடிவு

முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெங்களூரு, விதான சௌதாவில் முதல்வா் ... மேலும் பார்க்க

சித்தராமையாவுக்கு எதிராக புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு

மாற்று நில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக புகாா் அளித்த சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நில... மேலும் பார்க்க

தாய்ப்பால் விற்பனை உரிமங்களை ரத்துசெய்ய கா்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவு

தாய்ப்பால் விற்பனை செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்ப்பாலை சேகரித்து, சேம... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் நடந்த கரோனா முறைகேடுகள் குறித்து பிரதமா் பேசவேண்டும்: சித்தராமையா

கா்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் கரோனா மேலாண்மையில் நடந்த முறைகேடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் இன்று 3 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல்

கா்நாடகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் புதன்கிழமை நடக்கவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதியில் ... மேலும் பார்க்க

எச்.டி.குமாரசாமி குறித்து கா்நாடக அமைச்சா் சா்ச்சை பேச்சு

ராமநகரம்: மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமியின் நிறத்தை சொல்லி பேசி கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா்.ராமநகரம் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க