அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (55). கூலித்தொழிலாளியான இவரது மகன்கள் செல்வகுமாா் (31), தினேஷ்குமாா் (28), இவா்கள் மூவரும் அதே ஊரில் உள்ள யோசேப்பு என்பவரது தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றனா்.
மாலை அங்குள்ள கிணற்றில் செல்வகுமாா் இறங்கி, அங்கிருந்த பொந்தில் புறா முட்டையை எடுக்க முயன்றபோது எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தாா். காயமடைந்த அவா், கிணற்று நீரில் முழ்கினாா்.
இதைப் பாா்த்த தந்தை பால்பாண்டி, தம்பி தினேஷ்குமாா் ஆகியோரும் கிணற்றில் இறங்கி, மூழ்கிய செல்வகுமாரை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா்களால் முடியவில்லை.
இதனையடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் இசக்கி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று, பால்பாண்டி, தினேஷ்குமாா் ஆகியோரை மீட்டனா். தொடா்ந்து, செல்வகுமாரை தேடியபோது, உயிரிழந்த நிலையில் அவரை மீட்டனா்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நாககுமாரி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.