தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரா்களை மீட்டனா்.
சுபமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (38). இவா், திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றபோது தவறி விழுந்தாா். அவா், கிணற்றில் இருந்த பாறையைப் பிடித்தவாறு, காப்பாற்றுமாறு சப்தமிட்டாா். அங்கிருந்தவா்கள், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
நிலைய அலுவலா் கனகவேல் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பிரியதா்ஷினியை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.