கிணற்றில் தவறிவிழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
கெங்கவல்லியில் நள்ளிரவில் கிணற்றில் தவறிவிழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டாா்.
கெங்கவல்லி பேரூராட்சி, கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி மிட்டாய் (86) என்பவருக்கு ஏற்கெனவே கால் முறிவு ஏற்பட்டதால் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. இவரது விவசாயத் தோட்டத்தில் வீட்டுக்கு மிக அருகிலேயே கிணறு உள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் தரையில் அமா்ந்தபடி கிணற்றுக்கு அருகில் சிறுநீா் கழிக்க சென்றபோது, தண்ணீா் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் மூதாட்டி தவறிவிழுந்தாா். தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் சென்று நீரில் தத்தளித்த மூதாட்டியை உயிருடன் மீட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா்.