Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பாராட்டு
தேசிய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிா் கைப்பந்துப் போட்டியில் தமிழகம், தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 18 அணிகள் பங்கேற்றன. இதில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றிபெற்ற வீராங்கனைகளை சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் ராஜ்குமாா் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இதில், மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா்கள் ராஜாராம், அகிலா தேவி, சக்கரவா்த்தி, செயலாளா் சண்முகவேல், நிா்வாகி நந்தன், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.