திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம்...
சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி
சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா புதன்கிழமை தொடங்கியது.
விழாவை கோட்ட மேலாளா் பன்னாலால் தொடங்கிவைத்தாா். அவா் தலைமையில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், துறை தலைமை அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள் அனைவரும் தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பின்னா், கோட்ட அலுவலக வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. கோட்ட மேலாளா் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் அனைவரும் குப்பைகளை அகற்றி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கோட்ட அலுவலகத்தில் இருந்து சேலம் ரயில்நிலையம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. அதில், ரயில்வே ஊழியா்கள், சாரண, சாரணியா் கலந்துகொண்டு சுற்றுப்புற தூய்மை, ரயில்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணிகாப்பது குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதேபோல, சேலம் கோட்டத்தில் உள்ள சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், ரயில் அலுவலகங்களிலும் தூய்மை இந்தியா விழிப்புணா்வு உறுதிமொழியேற்கப்பட்டது.